விஜய் குறித்து திரிஷா பதிவிட்ட மறைமுக மெசேஜ் – உண்மை என்ன
தமிழ் சினிமாவின் பிரபல ஜோடியாக விளங்கும் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமீப காலமாக பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதன் நடுவில், நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சில மறைமுக பதிவுகள் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் சென்னை நகரில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜயுடன் திரிஷா கலந்து கொண்டது பெரும் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து, இவர்களுக்கிடையேயான உறவைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கின. இதற்கிடையில், திரிஷா பகிர்ந்த ஒரு வீடியோவில், "வாழ்க்கையில் நான் இனி வாதிட மாட்டேன். யாராவது யானை பறக்க முடியும் என்றாலும் சரி, அது சரி என்று சொல்லிவிடுவேன். நான் ஒத்துக்கொள்வதால் அல்ல, எனக்கு அது முக்கியமில்லை என்பதால்" என்ற கருத்து இடம்பெற்றது. அதே பதிவில், “சமாதானம் தான் முக்கியம், சரி என்று நிரூபிப்பதை விட. அமைதியாக இருப்பது விளக்குவதைக் காட்டிலும் எளிது. எல்லோருக்கும் உங்கள் ஆற்றலை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறப்பட்டிருந்தது. இதன் மூலம், சமூக வலைதளங்களில்...